இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்:சோதனையில் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்:சோதனையில் இருவர் கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை:ஆழியாறு வழியாக கேரளாவுக்கு போலி பதிவெண் கொண்ட மொபட்டில் கஞ்சா கடத்த முயன்ற, இருவரை வனத்துறையினர் கைது செய்து, ஆழியாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சோதனைச் சாவடியில் நேற்று பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, மொபட் ஒன்றை சோதனையிட்டனர். அப்போது, மொபட்டில் 'கேஎல் 10 பி ஏ 2840' என்ற பொய்யான பதிவு எண் ஒட்டப்பட்டு இருந்தது.
வனத்துறையினர் மேலும் சோதனையிட்டதில், மொபட்டின் சீட்டுக்கு அடியில் பொட்டலத்தில், முக்கால் கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த லாரி பாரம் ஏற்றும் வேலை செய்யும் முகமது ரிசாத், 30 மற்றும் நாகராஜ், 38 என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, வாகனம் மற்றும் கஞ்சாவுடன் ஆழியாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆழியாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட இருவரும் பாலக்காடு வழியாக பஸ்களில், தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
''தற்போது முதல் முறையாக சாலக்குடி வழியாக மலப்புரத்துக்கு, கஞ்சா கடத்திச் செல்ல முயன்ற போது, ஆழியாறு சோதனையில் சிக்கிக்கொண்டனர். ''இருவரும் பழநியில் இருந்து கஞ்சா வாங்கிவந்து, வாகனத்தில் பொய்யான பதிவு எண்ணை ஒட்டி கேரளா செல்ல முயன்றுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X