பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்: கிராமசபையில் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்: கிராமசபையில் தீர்மானம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:சுதந்திர தின கிராம சபையில், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சிகளில், சுதந்திர தினத்தன்று, கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இதில், வரும், 2019 ஜன., 1 முதல், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.எனவே, கேரிபேக், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை, உற்பத்தி, இருப்பு, பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்கும் வகையில், அனைவரும் ஒத்துழைக்கவும், அனைத்து நடவடிக்கைகள் எடுக்கவும் கிராம சபையில் விவாதித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அதோடு, கிராம வளர்ச்சித்திட்டம், வறுமையே இல்லாத கிராமம் உருவாக்கும் மத்திய அரசின், அந்தியோதயா இயக்கம், வரவு-செலவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, முழு சுகாதார மாநிலத்திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணிகள் தேர்வு, மகளிர் திட்டம், பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட, 14 பொருட்கள் மற்றும் தனி அலுவலரால் கொண்டு வரப்படும் கூடுதல் பொருட்கள் குறித்து விவாதித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X