கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட, 55 கூட்டுறவு அமைப்புகளின் தலைவர், துணை தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன் முன் அறிவிக்கப்பட்டது. நான்கு கட்டங்களாக தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு கட்ட தேர்தல், பரபரப்புடன் நடந்தது. அடுத்த கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில், கோர்ட் உத்தரவால், ஒட்டு மொத்த தேர்தலும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், முதல் இரண்டு கட்ட தேர்தல்களில், தேர்வான உறுப்பினர்கள் மட்டுமன்றி, தலைவர், துணைத்தலைவர்களும் தேர்ந்தெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. நிறுத்திவைக்கப்பட்ட நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் மீண்டும் துவங்கியது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், 55 கூட்டுறவு அமைப்புகளுக்கான தலைவர், துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றனர்.
வால்பாறை
வால்பாறை உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில், 11 இயக்குனர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்.,மாதம், 27ம் தேதி நடந்தது.கோர்ட் தடை உத்தரவுக்கு பின் கடந்த, 7ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், இயக்குனர்களாக, 11 பேர் வெற்றி பெற்றனர். தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் காலை தேர்தல் அதிகாரி சிவாஜி முன்னிலையில் நடந்தது. இதில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ரஞ்சித்குமார், ஏழு ஓட்டுக்கள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X