வேலையிழந்த பழங்குடியினருக்கு உணவுப்பொருட்கள் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலையிழந்த பழங்குடியினருக்கு உணவுப்பொருட்கள் வினியோகம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னார்பதி பழங்குடியின மக்கள் மழை காரணமாக வேலை இழந்துள்ளதால், வனத்துறை சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வனக்கோட்டத்தில் மொத்தம், 35 பழங்குடியின செட்டில்மென்ட்கள் உள்ளன. இதில், 4,662 பேர் வசிக்கின்றனர்.இவர்கள், விவசாய கூலி வேலைக்கு சென்றும், வனத்துறையில் தற்காலிக பணி செய்தும் ஜீவனம் செய்கின்றனர்.
இந்நிலையில், புலிகள் காப்பக பகுதிகளில் இடைவிடாது மழை பெய்வதால், வேலைக்கு செல்ல முடியாமல் பழங்குடியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்நிலையில், பழங்குடியினர் வாழ்வாதாரம் காக்க, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையில், சின்னார்பதி பழங்குடியின மக்களுக்கு, மழைக்கால நிவாரணமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
சின்னார்பதி செட்டில்மென்டில் மொத்தமுள்ள, 33 பழங்குடியின குடியிருப்புகளுக்கு தலா, ஐந்து கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை தலா ஒரு கிலோ வீதம் வழங்கப்பட்டது. இதனால், பழங்குடியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல், மழையால் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான மற்ற செட்டில்மென்ட் பழங்குடியினருக்கும், மழைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X