நேர்மாறான நிகழ்வு! கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்| Dinamalar

தமிழ்நாடு

நேர்மாறான நிகழ்வு! கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை:வறட்சி காரணமாக தென்னை மகசூல் குறைந்து, கொப்பரை உற்பத்தியும் பாதியாக சரிந்துள்ளது. ஆனால், நேர்மாறாக விலையும் குறைவதால், விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 52 ஆயிரம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது; தேங்காய் உற்பத்தியும், கொப்பரை உற்பத்தி செய்யும் களங்களும் ஏராளமாக உள்ளன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்கள் செயல்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால்,ஏராளமான தென்னைமரங்கள் காய்ந்தன. தண்ணீர் பற்றாக்குறையால், தேங்காய் மகசூல் குறைந்துள்ளது. இந்தாண்டு ஓரளவு மழை பெய்ததால், காய்ந்து வந்த தென்னை மரங்கள் உயிர் பிடித்துள்ளன.ஆனால், தேங்காய் மகசூல் அதிகரிக்கவில்லை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக, நுாறு டன் கொப்பரை உற்பத்தி இருக்கும். தற்போது, பெரும்பாலான களங்கள் மூடப்பட்டுள்ளன.நாள் ஒன்றுக்கு சராசரியாக, 50 டன் கொப்பரை உற்பத்தி மட்டுமே உள்ளது. அதிலும், தொடர்மழை காரணமாக, கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பிலும், கொப்பரை மார்க்கெட் விலை உயராமல் குறைந்து வருகிறது.சில மாதங்களுக்கு முன், கொப்பரை கிலோ, 142 ரூபாய் வரை விற்றது. தற்போது கொப்பரை வரத்து பெருமளவு குறைந்தாலும், விலையும் குறைந்து வருகிறது. தற்போது, கிலோ, 98 முதல் 102 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடவடிக்கை வேண்டும்
கொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:கொப்பரைக்கு காங்கயம் மார்க்கெட் பிரதானமாக உள்ளது. தொடர் வறட்சியால், தென்னை மரங்கள் காய்ந்து, மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்தும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை உற்பத்தியும் குறைந்துள்ளது.வரத்து குறைவால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வேண்டும். ஆனால், விலை உயர்வதற்கு மாறாக, தினமும் இறங்கி வருகிறது. ஒரு சில தேங்காய் எண்ணை ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆதிக்கம், சிண்டிகேட் காரணமாக விலை குறைந்துள்ளது.கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்கவும், விவசாயிகளுக்கு கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X