ஆசிரியர்களுக்கு முகநூல் பக்கம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு முகநூல் பக்கம்!

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை;அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கென முகநுால் பக்கம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளும் மாற்றமடைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்', வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.தபால்களில் அனுப்பப்பட்டு வந்த தகவல்களும் உத்தரவுகளும், இ-மெயிலை தொடர்ந்து, இப்போது, 'வாட்ஸ் அப்', மூலம் அனுப்பும் வரை முன்னேற்றமடைந்துள்ளது.கற்பித்தல் முயற்சியிலும், பாடபுத்தகத்தை கடந்து, பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை, வகுப்பறையில் அறிந்து கொள்ள, 'ஸ்மார்ட் வகுப்புகள்' துவக்கப்பட்டுள்ளன.இதன் அடுத்தகட்ட முயற்சியாக, இப்போது, பாடப்புத்தகங்களில், 'க்யூ ஆர் கோட்', என்ற நடைமுறை கொண்டுவாரப்பட்டுள்ளது. இதில், அந்த பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை, கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்வதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.இதைதொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வித்துறை, சமூக வலைதளத்திலும் பங்களிப்பை துவக்கியுள்ளது. முகநுாலில், 'வொர்க் பிளஸ்', என்ற பக்கம் கல்வித்துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் இணைய விரும்பும் ஆசிரியர்கள், அந்த பக்கத்தில் தங்களின் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். அவர்களின் விபரங்களை அதிகாரிகள் சரிபார்த்து, எந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ, அந்த குழுவில் ஆசிரியர்கள் சேர்க்கப்படுகின்றனர்.தொடர்ந்து, ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முயற்சி, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துதல் போன்ற பல்வேறு கல்வித்துறை தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். ஆசிரியர்கள் மட்டுமே, இந்த முகநுால் பக்கத்தை பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும் வகையில், பாதுகாக்கப்பட்டுள்ளது.இதனால், இதுவரை அறியாத பல பள்ளிகளின் சிறப்புகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் இந்த செயல்பாட்டை வரவேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X