Computer Baba, four other Hindu religious leaders get MoS status ahead of MP elections | ம.பி., தேர்தல்: அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்| Dinamalar

ம.பி., தேர்தல்: அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மத்தியப் பிரதேச தேர்தல், மத தலைவர்கள் அரசியல்,  மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல், பாஜக, கம்ப்யூட்டர் பாபா, ஹரிஹரன் மகாராஜ், பண்டிட் யோகேந்திர மஹந்த், நர்மதானந்த் மகராஜ், பையூமகராஜ், மகராஜ் மதன்மோகன் காதேஷ்வாரி ,பாபா அவதேஷ் புரி, Madhya Pradesh Elections, Religious Leaders Politics, Madhya Pradesh Legislative Elections, BJP, Computer Baba, Hariharan Maharaj, Pandit Yogendra Mahant, Narmanand Maharaj, Paimumakaraj, Maharaj Madanmohan Gadeshwari, Baba Avadesh Puri,

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மதத் தலைவர்கள் அரசியலில் நுழைவதற்கும், தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயார் செய்து வருகின்றனர்.
ம.பி., மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மூன்று முறை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பா.ஜ., அரசு மத தலைவர்களான கம்ப்யூட்டர் பாபா, ஹரிஹரன் மகாராஜ், பண்டிட் யோகேந்திர மஹந்த், நர்மதானந்த் மகராஜ், பையூமகராஜ் உட்பட சிலருக்கு மாநில அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தை வழங்கி கவுரவித்தது.இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கம்யூட்டார் பாபா சாது சமூகத்தின் சார்பாக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். சமுதாயத்தின் நலனுக்காக வேலை செய்ய நாங்கள் முயல்வோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற் குறிப்பிட்ட தலைவர்கள் உட்பட பலர் வரும் தேர்தலில் பா.ஜ, சார்பில் போட்டியிடவும், பா.ஜ.,வேட்பாளர்களாக அறிவிக்கப்படாத பட்சத்தில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத தலைவர் மகராஜ் மதன்மோகன் காதேஷ்வாரி கூறுகையில் பா.ஜ.,எனக்கு போட்டியிட சீட் தரவில்லை யெனில் சுதந்திரமாக போட்டியிட உள்ளேன். என் வெற்றி 101 சதவீதம் நிச்சயம். கடந்த 30 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்துவருகிறேன் என கூறி உள்ளார்.

பாபா அவதேஷ் புரி கூறுகையில் உஜ்ஜய்னி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும். விஎச்.பி., மற்றும் சங் பரிவாரங்களுடன் நெருக்கமாக உள்ளதாக கூறி உள்ளார்.கடந்த தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
13-ஆக-201817:25:10 IST Report Abuse
sumutha - chennai அய்யா வீரமணி அவர்களே இங்கேயே உக்கார்ந்துக்கிட்டு யாவாரத்தை பார்த்துக்கிட்டிருக்கீங்க. ஒங்க கடைய மத்த மாநிலத்துக்கு கொண்டுபோக வேண்டிய நேரம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இதுதான் சரியான சமயம். ஒடனே வடநாட்டுக்கு கெளம்பி போங்க. ஒங்களுக்கு வேண்டியது நிச்சயம் கிடைக்கும். தமிழ் நாட்டு மக்களும் ஒங்கள மறக்க மாட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201813:10:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்து தர்மத்தின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு எல்லா இந்துக்களுக்கும் இருக்கிறது. அந்நியனின் அடிமை ஆட்சியில் நம் முன்னோர்கள் ஒற்றுமையுடன் இருந்து நம் தர்மங்களை காப்பாற்றினார்கள். எத்தனையோ கொடுமைகளை , கொலைகளை , கற்பழிப்புகளை அந்நியர்கள் நடத்தியபோதும் நம் முன்னோர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். அந்த தியாகத்தை காக்க வேண்டிய கடமை இந்து நமக்கு இருக்கிறது. இந்து தர்மங்களை மதிக்கும் , போற்றும் கட்சிகளுக்கே உங்கள் வாக்கு என்கிற நிலை வந்தால் தான் ஒரு இந்துவுக்கு இந்த நாட்டில் மதிப்பு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஆக-201812:32:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எப்படியோ.. நாசமாப்போனா சரி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X