வளர் இளம்பெண் பாதுகாப்பு திட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் முடக்கம்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளர் இளம்பெண் பாதுகாப்பு திட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் முடக்கம்?

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில், வளர் இளம்பெண்களுக்காக துவக்கப்பட்ட பாதுகாப்பு திட்டம் துவக்கத்தோடு முடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டு சமூக நலத்துறையின் கீழ் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அட்டை வழங்கப்பட்டது. அந்த அட்டையில், அவர்கள் யாரிடமும் கூற முடியாத, குடும்பம், சமூகம், பள்ளி அல்லது பொது இடங்களில் அவர்களுக்கான பிரச்சனை குறித்தும், அதற்கான நடவடிக்கை எடுப்பதை குறிப்பிட்டு, தபால் அனுப்பிவிட வேண்டும்.அந்த தபால் நேரடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்படுகிறது. தபாலில் வரும் புகார்கள் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகமும் அறிவித்தது.இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பள்ளியை, அந்தந்த வட்டாரத்துக்குட்பட்ட சமூக நலத்துறையினர் பார்வையிட வேண்டும்.அந்த மாணவியருக்கு இந்த அட்டைகளை வழங்கியும், அதன் விபரங்களையும் எடுத்து கூற வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பள்ளியில், மாணவியருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.
அதன்பின், மற்ற எந்த பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மேலும், மாணவியர் தங்களுக்கான பிரச்னைகள் குறித்து புகார்கள் தெரிவித்துள்ளனரா, அதற்கு மாவட்ட நிர்வாகம் நடைவடிக்கை எடுத்துள்ளதாக என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.மாணவியருக்கு பயனுள்ள இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து சமூக நலத்துறை முன்வரவில்லை.இத்திட்டம் பெயரளவில் துவக்கப்பட்டு, துவக்கத்தோடு முடங்கியும் போனது. இத்தகைய திட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X