சத்துணவு மையம் கட்டும் பணி தீவிரம்: ரூ.5.55கோடி ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையம் கட்டும் பணி தீவிரம்: ரூ.5.55கோடி ஒதுக்கீடு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் 146 அரசு பள்ளிகளில் சமையலறையுடன் கூடிய சத்துணவு மையம் கட்டுவதற்கு ரூ.5.55 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 520 சத்துணவு மையங்கள் உள்ளன. தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தனியார் பள்ளிகளை தவிர்த்து சில அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் பழைய கட்டடமாகவும், மழைக்காலத்தில் இடிந்து விழும் நிலையிலும் பாதுகாப்பற்று உள்ளது. சீரமைக்க வேண்டிய கட்டடங்கள் குறித்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டது.
146 சத்துணவு மையம்
திண்டுக்கல்- 5, ஆத்துார்- 9, ரெட்டியார்சத்திரம்- 16, சாணார்பட்டி- 2, நத்தம் - 8, நிலக்கோட்டை- 5, வத்தலகுண்டு- 9, வேடசந்துார்- 18, குஜிலியம்பாறை- 12, வடமதுரை- 22, பழநி- 6, தொப்பம்பட்டி- 16, ஒட்டன்சத்திரம்- 14, கொடைக்கானல்- 4 என மொத்தம் 146 சமையலறையுடன் கூடிய சத்துணவு மையம் கட்டுவதற்கு ரூ.5.55 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கூடுதலாக 53 கட்டடங்கள் கட்ட அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை கன்று வழங்கப்பட்டு வருகிறது, என நேர்முக உதவியாளர் (சத்துணவு) சதீஸ்பாபு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X