தி.மு.க., ஆதரவால் அ.தி.மு.க.,விற்கு பதவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆதரவால் அ.தி.மு.க.,விற்கு பதவி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செம்பட்டி:ஆத்துார் கூட்டுறவு சங்க தலைவர் பதவியை, தி.மு.க.,வினர் ஆதரவுடன் அ.தி.மு.க., கைப்பற்றியது.பச்சைமலையான்கோட்டை கூட்டுறவு சங்கத்திற்கு, தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தி.மு.க.,வைச்சேர்ந்த அம்சவள்ளி, கனகராஜ், சங்கர் ஆகியோர், ராஜினாமா செய்தனர். கருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடமளிப்பதில், அ.தி.மு.க., அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர்.ஆத்துார் சங்க தலைவர் பதவிக்கு, ஒன்றிய அ.தி.மு.க., ஜெ., பேரவை செயலாளர் தேவராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணிராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.சங்க செயலாளர் அசோக்குமார் தேர்தலை நடத்தினார். மொத்தமுள்ள 11 இயக்குனர்களில், ஒருவர் பங்கேற்கவில்லை. தி.மு.க.,வினர் 4 பேரின் ஆதரவுடன் 8 வாக்குகள் பெற்று, தேவராஜ் வென்றார். பல சங்கங்களில், தி.மு.க., பிரமுகர்கள் ராஜினாமா செய்தனர். ஆத்துார் தேர்தலில் பங்கேற்றதுடன், அ.தி.மு.க.,விற்கு தலைவர் பதவியையும் தி.மு.க.,வினர் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201807:42:08 IST Report Abuse
Karthik கூட்டு உறவு திமுக அதிமுக. கூட்டுறவு சங்கம் திவால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X