கேரளா மீட்புக்கு செல்லும் ரெட்கிராஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா மீட்புக்கு செல்லும் ரெட்கிராஸ்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திண்டுக்கல் ரெட்கிராஸ் அமைப்பினர் கேரள செல்ல உள்ளனர்.கேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் மழை, வெள்ளத்தால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கபப்ட்ட பகுதிகளுக்கு நன்கொடை, நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.திண்டுக்கல் ரெட்கிராஸ் அமைப்பினர் மீட்பு பணிக்கு ஒரிரு நாட்களில் செல்ல உள்ளனர். மீட்பு பணிக்கு செல்ல விரும்பும் ரெட்கிராஸ் தொண்டர்கள் தங்கள் பெயர்களை உடனே பதிவு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களாக வழங்கி உதவலாம். இதற்காக 2 கிலோ பாக்கெட் கொண்ட அரிசி பைகள், பிஸ்கட் பாக்கெட், மெழுகு வர்த்தி பாக்கெட், கொசு வர்த்தி காயில், தீப்பெட்டி பாக்கெட், பிளிச்சிங் பவுடர், புதிய வேஸ்டி, சேலை, நைட்டி, டவல், சமையல் பாத்திரங்கள், ஸ்டவ், பேஸ்ட், பிரஸ், சோப்பு, நாப்கின் போன்ற பொருட்களும் வழங்கிடலாம் என ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜகுரு தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 99761 35222 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X