இறைச்சல் பாலத்தில் 'செல்பி' எடுக்கும் பயணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சல் பாலத்தில் 'செல்பி' எடுக்கும் பயணிகள்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கூடலுார்:குமுளி மலைப்பாதையில் உள்ள இறைச்சல் பாலத்தில் கூடுதல் நீர்வரத்து இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த போலீஸ் கண்காணிப்பு வேண்டும்.லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
குவியும் பயணிகள்
பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 2000 கன அடி நீரில் 1600 கன அடி நீர் மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் வழியாகவும், 400கன அடி நீர்குமுளி மலைப்பாதையில் உள்ள இறைச்சல் பாலம் வழியாகவும் திறந்து விடப்பட்டுள்ளது.
அவ்வழியாக செல்பவர்கள் தண்ணீர் கொட்டுவதைப் பார்த்தவுடன் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு அதைப்பார்த்து ரசிக்கின்ற னர்.பலர் ரோட்டோரத்திலேயே நின்று 'செல்பி' எடுக்கின்றனர்.குமுளியில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி வேகமாக வரும் வாகனங்கள் இதனால் இறைச்சல் பாலம் வளைவில் வரும் போது விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியில் நிற்கும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது.
போலீஸ் கண்காணிப்பு தேவை:இறைச்சல் பாலத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு கீழ்ப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் ஏறி நின்று ஆபத்தான நிலையில், தண்ணீர் கொட்டுவதை பார்த்து வருகின்றனர். நீர் நிறுத்தப்படும் வரை இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அவசியமானதாகும். இல்லாவிட்டால் பலர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X