இழுபறியில் இன்டர்நெட் வசதி:கண்டுகொள்ளப்படாத கிராமங்கள்: கேள்விக்குறியாகும் முன்னேற்றம்| Dinamalar

தமிழ்நாடு

இழுபறியில் இன்டர்நெட் வசதி:கண்டுகொள்ளப்படாத கிராமங்கள்: கேள்விக்குறியாகும் முன்னேற்றம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நரிக்குடி:கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. கிராமங்களின் முன்னேற்றத்திற்கு தொலை தொடர்பு அவசியமாகிறது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் தொலை தொடர்பு வசதி இல்லாமல் பின்தங்கியே உள்ளன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும்,கிராமங்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், கிராம முன்னேற்றம் கேள்விக்குறியாகிறது.
கிராமங்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் வந்தாலும், மக்களை சென்றவடைதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமங்களில் முழுமையான தகவல் தொடர்பு திட்டத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் ஏ.முக்குளம், முடுக்கன்குளம், எஸ்.மறைக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி சரிவர கிடைக்கவில்லை. ஒரே டவரில் பல்வேறு கம்பெனிகள் இணைந்து சேவை வழங்குவதால், அதன் வேகம் குறைவாக இருக்கிறது. இப்பகுதியில் போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்குகின்றன. இங்கு இன்டர்நெட் சேவை அவசியமாகிறது. இக்கிராமங்களில் பி.எஸ்.என்.எல்., கேபிள் இணைப்பு இல்லாததால், இ.மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட தகவல்களை பரிமாற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
மேலும் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை நன்கு அறிய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. போதிய இணையதள வசதி இல்லாததால் பெரும்பாலான கிராம மாணவர்கள் லேப்டாப்பைப் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்.
அலைபேசி என்பது சர்வசாதாரணமாகி விட்டாலும், கிராமப்புறங்களில் தற்போதுதான் 2ஜி, 3 ஜி சேவை கிடைக்கிறது.இதில் போதிய அளவு வேகம், சிக்னல் கிடைக்காததால், மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.பி.எஸ்.என்.எல்., கொண்டு வந்த வில்போன் சேவையில் சரிவர சிக்னல், பராமரிப்பு இல்லாததால், வாடிக்கையாளர்கள் இணைப்பை துண்டிக்கின்றனர்.
கேபிள் பயன்பாட்டில் இருக்கும் வசதி, மற்ற இணைப்புகளில் இருப்பதில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் கேபிள் இணைப்பையே விரும்புகின்றனர். திருச்சுழி, நரிக்குடி, கஞ்சமநாயக்கன்பட்டி டி.வி.எஸ் வரை கேபிள் பதிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து 30 கி.மீ.,துார சுற்றளவுக்கு பி.எஸ்.என்.எல்., கேபிள் இணைப்பு இல்லாததால், பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. தரமான சேவை வழங்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கிராமங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், பி.எஸ்.என்.எல்., கேபிள் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சிக்னலுக்கு மர உச்சிகிராமங்களில் தனியார் நிறுவனம் தொலை தொடர்பு சேவை வழங்கினாலும், சில நேரங்களில்சிக்னலுக்காக மாடி அல்லது மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. மின்சார கட்டணம் செலுத்த 30 கி.மீ.,துாரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தற்போது இன்டர்நெட் மூலம் பல்வேறு கட்டணம் செலுத்தும் முறை இருந்தும், அந்த வசதி எல்லாம் கிராமங்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது.மாணவர்கள் தேர்வுக்கு தகவல் பெற, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய,வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பி.எஸ்.என்.எல்., கேபிள் இணைப்பு இருந்தால்பெரும்பாலானவர்கள் இணையதள இணைப்பு பெறுவார்கள்.கிராமங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்--செல்வம், சமூக ஆர்வலர், நாலுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X