ஓராண்டாகியும் பணி முடிந்தபாடில்லை:திறந்தவெளியை நாடும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓராண்டாகியும் பணி முடிந்தபாடில்லை:திறந்தவெளியை நாடும் மக்கள்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி:பொது சுகாதார வளாகம் கட்டும் பணியை விரைந்து முடித்து,பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி தெற்கு தெருவில் இருந்த சுகாதார வளாகம் சேதமடைந்ததால் , இடித்து அப்புறப்படுத்தினர்.
அந்த இடத்தில் ஒரு வருடத்திற்கு முன்பே புதிய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கியது.ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டு ,பல மாதங்களாக பணி இழுத்துக் கொண்டே செல்கிறது. தற்போது கட்டடத்தில் பூச்சு நடந்த நிலையில் அப்படியே உள்ளது. சுகாதார வளாகம் இல்லாமல் அப்பகுதியினர் மிகுந்த சிரமப்படுகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எனவே சுகாதார வளாகம் கட்டும் பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X