திறக்கப்படாத வினை தீர்க்கும் விநாயகர் கோயில்: இந்து அறநிலையத்துறை அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறக்கப்படாத வினை தீர்க்கும் விநாயகர் கோயில்: இந்து அறநிலையத்துறை அலட்சியம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோயில் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் தெப்பகுளம் 'சூரிய புஷ்கரணி' என்று அழைக்கப்டும் தீராத நோய்களை தீர்க்கும் குளமாக இருந்ததாக வரலாறு உள்ளது.முன்காலத்தில் குஷ்டநோய் வந்த ஒருவர் ஒரு மண்டலம் தெப்பத்தில் குளித்து, மீனாட்சி சொக்கநாதரை வழிபட்டதால் அவருடைய நோய் நீங்கியது. அவர் இந்த படித்துறையின் அருகில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து, வினை தீர்க்கும் விநாயகர் என்று பெயரிட்டார். விசேஷமான இந்த கோயில் பிரசித்தி பெற்றது. 1971 ல் கோயில் கும்பாபிசேஷகம் நடந்துள்ளது.நாளடைவில் கோயில் அருகில் நகராட்சி பூங்காவுக்கு சுற்றுச் சுவர் கட்டியதால், கோயில் மெயின் ரோட்டிலிருந்து தெரியாமல் மறைந்தது. பின்னர் இந்து சமய அறநிலையத்துறையினரும் கோயிலை பராமரிப்பு செய்யாமல் பூட்டி விட்டனர். தற்போது கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகளும், வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. கோயில் அருகில் உள்ள படித்துறை குடிமகன்களின் பாராக மாறி விட்டது, சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. இந்து சமய அறநிலையத்துறையும் கோயிலை பராமரிக்க அக்கறை காட்டவில்லை. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த கோயில் பாழடைந்து கிடக்கிறது. பக்தர்கள் மிகுந்த வேதனைபடுகின்றனர். கோயிலை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.-- - -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X