நீர்நிலைகளை கவனித்தாலே 'சுத்தம்' நிச்சயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளை கவனித்தாலே 'சுத்தம்' நிச்சயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசியில் கண்ட இடங்களில் குப்பையை கொட்டுவது, வாறுகாலில் அடைப்பு ஏற்படும் அளவிற்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை கொட்டுவது என சிலர் நகரை நாசப்படுத்துகின்றனர் . துப்புரவு பணியாளர்கள் ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பையை அள்ளுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகின்றனர். ஊரணிகள், நீர்வரத்துக் கால்வாய் போன்ற நீர்நிலைகள் கவனிக்கப்படுவதில்லை.சிவகாசியை மாசில்லாத நகராக மாற்ற அரசு மட்டுமின்றி, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.சிவகாசியில் காமராஜர் சிலை, அம்மன் கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்வரத்துக் கால்வாய் முழுவதும் பாலீதீன் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் நிறைந்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தோடு சுகாதாரகேட்டை ஏற்படுத்துகிறது.அன்றைய காலத்தில் சிவகாசி பெத்தமரத்து ஊரணி நகருக்கே குடிநீர் ஆதராமாக விளங்கியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரணியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். மக்கள் குளிப்பதற்கும், புழக்கத்திற்கும் ஊரணியை பயன்படுத்தி வந்தனர். அன்றைக்கு இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை. 'போர்வெல்' அமைத்தால் 50 அடியில் சுவை மிக்க தண்ணீர் கிடைத்தது. நாளடைவில் ஊரணி கண்டுகொள்ளப்படாமல் துார்ந்து போய்விட்டது. நகரின் ஒட்டு மொத்த கழிவுகளும் ஊரணியில் தேங்குகிறது. மேலும் ஊரணி முழுவதுமே கோரைப் புற்கள் முளைத்துள்ளது. பொறுக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி தொற்றுநோயை பரப்புகிறது.இப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஊரணியை துார்வார அரசு நிதி ஒதுக்கினாலும் எல்லாம் வீணாகி விட்டது.மழை பெய்தாலும் ஊரணியில் மழைநீர் தேங்க வழியில்லை. தற்போது 400 அடிக்குப் பின்னரே தண்ணீர் கிடைத்தாலும் சுவை இல்லை.ஊரணியை முறையாக துார்வாரி, கோரைப்புற்களை அழித்து, தடுப்புச் சுவர் ஏற்படுத்தி, மழைநீரை சேகரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இதுபோல் சிவகாசியில் உள்ள ஊரணிகள், நீர்வரத்து கால்வாய் போன்ற அனைத்து நீர்த் தேக்கப்பகுதிகளிலும் நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கருவேலம் மரங்களை அகற்றினாலே 'மாசில்லா சிவகாசி'யாக மாறிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X