12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 12வது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி, கணவனுடன் தலைமறைவான கர்ப்பிணியை, போலீசார் தேடி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம், வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ஆராயி, 52. தம்பதிக்கு, ஆண், பெண் என, ஒன்பது பிள்ளைகள் உள்ளன. இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, ஆராயி, 12வது முறை கர்ப்பமாக உள்ளார். கடந்த, 4ம் தேதி, சிங்கவனம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆராயியை, டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, ரத்தம் குறைவாக உள்ளது எனவும், தொடர்ந்து, மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, பிரசவிக்க வேண்டும், எனவும் டாக்டர்கள் கூறினர். ஆனால், ஓரிரு நாட்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கியிருந்த ஆராயி, அங்கிருந்து வெளியேறி, வீட்டிற்கு செல்லாமல், கணவனுடன் தலைமறைவாகி விட்டார். 'பிரச்னையின்றி பிரசவிக்க வேண்டும்; குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்' என்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு, தம்பதியை பல நாட்கள் தேடியது. அவர்கள் கிடைக்காததால், மாயமான கர்ப்பிணியை கண்டு பிடித்து தரக்கோரி, போலீசில் புகார் செய்துள்ளனர். ஆராயி உறவினர்கள் கூறியதாவது:ஆனந்தன் ஆராயி தம்பதிக்கு, 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. ஏற்கனவே, 11 குழந்தைகளும் சுக பிரசவமாக தான் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன.ஒன்பது பிள்ளைகளில், நான்கு பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆப்பரேஷனுக்கு பயந்து, தலைமறைவாகி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X