'பேஸ்புக்' தொடர்பால் விபரீதம்: கல்லூரி மாணவி தீக்குளிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்' தொடர்பால் விபரீதம்: கல்லூரி மாணவி தீக்குளிப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பழகியவர், திருமணம் செய்து கொள்ள மிரட்டியதால், திருச்சியில், கல்லூரி மாணவி தீக்குளித்தார். மிரட்டிய மாணவர், கைது செய்யப்பட்டார்.
திருச்சியை சேர்ந்த, 19 வயது மாணவி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு, திருச்சி, அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவரும், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலையில் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருபவருமான, விஷால், 19, என்ற மாணவர், பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். இருவரும், ஒரு ஆண்டுக்கு மேல் நட்பை தொடர்ந்த நிலையில், காதலர்களாக மாறியுள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். இதனால் காதலன் விஷாலுடன் பேசுவதை, மாணவி நிறுத்தினார். அவரை தொடர்பு கொள்ள முடியாத விஷால், மாணவி கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் வழியில், சந்தித்து பேசியுள்ளார்.அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், பேஸ்புக்கில் பகிரங்கமாக பதிவு போடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, நேற்று முன்தினம் காலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, பெற்றோர் காப்பாற்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, பொன்மலை அனைத்து மகளிர் போலீசார், மாணவர் விஷால் மீது வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X