பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் தஞ்சை அருகே எரித்து கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் தஞ்சை அருகே எரித்து கொலை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை எரித்து, மூன்று துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி, வாய்க்காலில் வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டையைச் சேர்ந்தவர் திருமுருகன், 29. இவரும், பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி பாரி பூவுடர், 60, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக, நண்பர்களாக இருந்து உள்ளனர். கடந்த, 3ம் தேதி திருச்சி வந்த பாரி பூவுடர், திருமுருகனுக்கு போன் செய்து, 'உங்கள் ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். 5ம் தேதி, திருச்சிக்கு சென்று, பாரி பூவுடரை அழைத்து வந்த திருமுருகன், மன்னார்குடி கோவிலை சுற்றி காட்டினார். பின், ஆவிக்கோட்டைக்கு சென்று, இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், பாரி பூவுடர் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் உடலை, டயரை வைத்து எரித்த திருமுருகன், பாதி எரிந்த உடலை, மூன்று துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி, வாட்டாக்குடி உக்கடை வாய்க்காலில் வீசியுள்ளார்.நேற்று மாலை, வாட்டாக்குடி உக்கடை, வி.ஏ.ஓ., தனவேலிடம் சரணடைந்த திருமுருகனை, மதுக்கூர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை, எஸ்.பி., செந்தில்குமார், விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X