புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடிநீரின்றி குழந்தைகள் தவிப்பு: பனமரத்துப்பட்டி, பெரமனூர் ஊராட்சி, பனங்காட்டில், மூன்றாண்டுகளுக்கு முன், புது கட்டடத்தில், அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. ஆனால், மையத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்காததால், சமையல் செய்ய, குழந்தைகள் குடிக்க, குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். மேலும், தண்ணீரின்றி கழிப்பறையை பன்படுத்த முடியாத நிலை உள்ளது.

- பி.ராமசாமி, பனங்காடு.

குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு: சேலம், வ.உ.சி., மார்க்கெட் பின்புறம், காய்கறி, மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுகிறது. இவற்றை, மாநகராட்சி ஊழியர்கள் தினமும் அகற்றாததால், மலைபோல் குவிந்துள்ளது. அவற்றை, நாய் உள்ளிட்ட கால்நடைகள் கடித்து, சாலைக்கு கொண்டு வருவதால், ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், வியாபாரிகள், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

- கா.கண்ணா, கிச்சிப்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X