மணிபர்ஸை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணிபர்ஸை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: கூட்டத்தில் கிழே கிடந்த மணிபர்சை எடுத்து, போலீசில் ஒப்படைத்த சிறுமியை, மக்கள் பாராட்டினர். ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வளாகத்தில், இலக்கிய நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதை, பஞ்சந்தாங்கி ஏரியைச் சேர்ந்த சசிகுமார் மகள் மோனிகா, 10, பார்த்துக்கொண்டிருந்தார். குகை, மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் அவர், மேடை அருகே, ஒரு மணிபர்ஸ் கிடப்பதை கண்டெடுத்து, அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், அதை திறந்து பார்த்தபோது, 3,500 ரூபாய், வங்கி ஏ.டி.எம்., கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் இருந்தது தெரிந்தது. போலீசார், மாணவியை பாராட்டிய நிலையில், பர்சை தவற விட்டவர், புறக்காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம், செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்ததில், திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த, டைல்ஸ் நிறுவன ஊழியர் நடராஜன், 29, பர்ஸ் தவறவிட்டது உறுதியானது. இதையடுத்து, மோனிகாவே, பர்சை நடராஜனிடம் வழங்கினார். ஏழை மாணவி என்பதையறிந்து, நடராஜன், 1,000 ரூபாய் கொடுக்க முயன்றும், அவர் வாங்க மறுத்துவிட்டார். 'நேர்மை' மாணவியை, போலீசார், மக்கள் பாராட்டினர். அதுமட்டுமின்றி, மாணவியின் படத்தை, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் சிலர் வெளியிட்டுள்ளதால், அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X