ஊக்கத்தொகை பெற மாணவர்களுக்கு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்கத்தொகை பெற மாணவர்களுக்கு போட்டி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முஜீப் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை, பள்ளி குழந்தைகளிடம் வளர்க்க, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், தபால் தலைகளை சேகரிக்கும் மாணவர்களிடையே போட்டி நடத்தி, ஊக்கத்தொகை வழங்கப்படும். அதில் பங்கேற்க, பள்ளி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, ஐந்து சதவீத தளர்ச்சி உண்டு. இதற்கு, தபால் அலுவலகங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு, பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். விரும்புவோர், தலைமை உள்பட அனைத்து தபால் அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். முதல் கட்டமாக, தபால் தலை சேகரிப்பு குறித்து வினாடி வினா, இரண்டாம் கட்டமாக அறிக்கை தயாரித்தல் போட்டி நடக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 14 மாலை, 5:00 மணிக்குள், 'முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் - 636 001' எனும் முகவரியில், தபால் மூலம் அல்லது நேரில் வழங்கலாம். விபரங்களுக்கு, 9344 422 883, 9003 311 225, 8838 578 612 என்ற மொபைல் எண்களில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X