'வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியாக முன்னாள் மாணவர்கள் இருக்க வேண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியாக முன்னாள் மாணவர்கள் இருக்க வேண்டும்'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: ''தற்போதை மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற, முன்னாள் மாணவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்,'' என, அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விமலாரோஸ்லின் பேசினார்.
சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், 'நட்பினை 93' எனும் தலைப்பில், 1993ல் படிப்பை முடித்த மாணவர்கள், வெள்ளி விழா சந்திப்பு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முதல்வர் விமலாரோஸ்லின் தலைமை வகித்து பேசியதாவது: இந்தாண்டு, 84 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதில், கணினி அறிவியல், பொறியியல் பிரிவில், 100 சதவீதம் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற, வழிகாட்டுபவர்களாக திகழவேண்டும். முன்னாள் மாணவர்கள் சங்கத்தை பதிவு செய்து, சமுதாயத்துக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் குறிப்பு அடங்கிய புத்தகத்தை, முதல்வர் விமலாரோஸ்லின் வெளியிட்டார். தொடர்ந்து, புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X