எரித்துக் கொல்லப்பட்டவர் கட்டடத் தொழிலாளி: 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எரித்துக் கொல்லப்பட்டவர் கட்டடத் தொழிலாளி: 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆத்தூர்: சூலாயுதத்தால் குத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்டவர் கட்டடத் தொழிலாளி என, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, ஐந்து பேரிடம், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆத்தூர் அருகே, துலுக்கனூர் வழியாக செல்லும் வசிஷ்ட நதி தடுப்பணையில், நேற்று முன்தினம், கோவில் சூலாயுதத்தால் சரமாரியாக குத்தப்பட்டு, தீயில் எரிக்கப்பட்டு, ஆண் சடலம் கிடந்தது. வி.ஏ.ஓ., அலமேலுமங்கை புகார்படி, ஆத்தூர் டவுன் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். இதுதொடர்பாக, மூன்று தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், கல்லாநத்தம் ஊராட்சி, செட்டில்மண்ட் காலனியைச் சேர்ந்த, கலைச்செல்வன் மகன் நரேஷ்குமார், 35, கொலை செய்யப்பட்டது தெரிந்தது. கட்டடத் தொழிலாளியான அவருக்கு, மனைவி சத்யா, 28, மகள் ஜீவா, 10, உள்ளனர். நான்காண்டுகளாக, ஈரோட்டில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம், சொந்த ஊர் வந்து, மகளை, அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு, இங்கேயே தங்கியுள்ளனர். ஜூலையில், பெரம்பலூரிலுள்ள சத்யாவின் சித்தப்பா ராஜேந்திரன் வீட்டில் தங்கி, வேலைசெய்ய சென்றுவிட்டு, ஒரே நாளில் மீண்டும் திரும்பினர். கடந்த, 9 காலை, 8:00 மணிக்கு, செட்டில்மண்ட் காலனியைச் சேர்ந்த, உறவினர் அன்புராஜ், 32, என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 11:00 மணிக்கு, அன்புராஜ் மட்டும் வீடு திரும்பியபோது, அவரிடம், கணவர் குறித்து, சத்யா கேட்டபோது, 'அவனுடன் சண்டை வந்ததால், எங்கு போனான் என தெரியவில்லை' எனக்கூறிவிட்டு, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த, 11ல், ஆற்றில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து, தகவலறிந்த சத்யா, போலீசாரிடம், கட்டடத் தொழிலாளி என, உடலை அடையாளம் காட்டினார். உடற்கூறு ஆய்வு செய்தபோது, ஏழு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. வசிஷ்ட நதி தடுப்பணை பகுதியிலுள்ள, பெரியநாயகி அம்மன் கோவிலில், நரேஷ்குமார், அன்புராஜ் உள்பட நான்கு பேர், பிரியாணி சாப்பிட்டு, மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், கள்ளக்காதல் விவகாரமா, முன்விரோதமா என, தனிப்படை போலீசார், சத்யா, அன்புராஜ் உள்பட ஐவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X