களைகட்டிய வண்டிவேடிக்கை: கண்டுரசித்த பொதுமக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டிய வண்டிவேடிக்கை: கண்டுரசித்த பொதுமக்கள்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: வண்டி வேடிக்கையை ஏராளமானோர் கண்டுகளித்தனர். ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், 12ம் ஆண்டு வண்டி வேடிக்கை, நேற்றிரவு நடந்தது. அதை காண, சேலம் மக்கள் குடும்பம் சகிதமாக, ஏராளமானோர் திரண்டு வந்தனர். கண்கவர், வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட வண்டி வேடிக்கை, சந்தைப்பேட்டையில் புறப்பட்டு, செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை வழியாக, தேர்நிலை பகுதியை கடந்து சென்றது. எட்டு வாகனங்களில், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, தசாவதாரம், தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சாமி, காளி, துர்க்கை, ஸ்வாமி மலை போன்று காட்சியளித்தவை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து அலங்கார வண்டிக்கும், வண்டி வேடிக்கை குழுவினர், பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X