குடிகார கணவரால் தொல்லை: 3 பெண் குழந்தைகளுடன் மனைவி மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிகார கணவரால் தொல்லை: 3 பெண் குழந்தைகளுடன் மனைவி மாயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: குடிகார கணவரின் தொந்தரவால், மூன்று பெண் குழந்தைகளுடன், மனைவி மாயமானார். மேச்சேரி அருகே, கூணாண்டியூர், தச்சன் காட்டுவளவைச் சேர்ந்த முருகன் மனைவி சாரதா. இவர்களது மகள்கள் பிரியதர்ஷினி, 15, அபிநயா, 12, ஸ்ரீவித்யா, 2. கூணாண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், பிரியதர்ஷினி, 10ம் வகுப்பு, அபிநயா, ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். மது பழக்கமுடைய முருகன், சாரதாவிடம், அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 8ல், போதை தலைக்கேறிய நிலையில், முருகன், சாரதாவை தாக்கி, கொன்றுவிடுவதாக மிரட்டி துரத்திச்சென்றார். தாயை காப்பாற்ற, மூன்று மகள்களும் பின் தொடர்ந்து சென்றனர். இரவில், அதே பகுதியைச் சேர்ந்த குமார் வீட்டில் தங்கிய அவர்கள், முருகனுக்கு பயந்து, சேலம் செல்வதாக கூறிச்சென்றவர்கள், வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று, சாரதாவின் தாய் அய்யம்மாள் அளித்த புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X