அதிக வட்டி தருவதாக துணை நடிகையிடம் ரூ.10 லட்சம் மோசடி: இளம்பெண் மீது புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிக வட்டி தருவதாக துணை நடிகையிடம் ரூ.10 லட்சம் மோசடி: இளம்பெண் மீது புகார்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: அதிக வட்டிக்கு கொடுப்பதாக ஆசைகாட்டி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் கல்பனா, 42. இவர் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவரிடம், திருச்சி வடக்கு ஆண்டார் வீதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, 35, என்பவர், தான் ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டுள்ளதால், டெபாசிட் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய கல்பனா, தன்னிடம் இருந்த, 10 லட்சம் ரூபாயை கடந்த, 2014ல், உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அவர், ஆறு மாதங்கள் மட்டும் அதிக வட்டி கொடுத்தார். அதன்பின் பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கல்பனா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உமா மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதன் படி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உமா மகேஸ்வரி தன்னை கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X