அடமான நிலத்தை மீட்க கொடுத்த 'செக்' திரும்பியது: தம்பதி மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடமான நிலத்தை மீட்க கொடுத்த 'செக்' திரும்பியது: தம்பதி மீது வழக்கு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கி, செக் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரிடம், மேலசிந்தாமணியைச் சேர்ந்த சிவசாமி மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர், தங்களது காலியிடத்தை அடமானமாக வைத்து, 1.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். சில மாதங்களுக்கு முன் கடன் தொகையில், 40 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்தனர். மீதியுள்ள பணத்துக்கு, 60 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு, இரு 'செக்'குகளை கொடுத்தனர். ராஜமாணிக்கம் அவற்றை வங்கியில் செலுத்தினார். ஆனால், கணக்கில் போதிய பணம் இல்லை என, 'செக்' திரும்பியது. இதுகுறித்து, ராஜமாணிக்கம், திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தம்பதியர் சிவசாமி, கிருத்திகா மீது, வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, கோட்டைக் குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X