மனைவி நகைகளை தர மறுத்து மிரட்டல்: கணவன், மாமனார், மாமியார் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி நகைகளை தர மறுத்து மிரட்டல்: கணவன், மாமனார், மாமியார் மீது வழக்கு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவன், மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த பாகீரதி பிரியதர்சினி, 34, என்பவருக்கும், மணப்பாறையைச் சேர்ந்த முகிலன், 36, என்பவருக்கும் கடந்த, 2012ல், திருமணம் நடந்தது. திருமணம் ஆன நான்கு மாதத்தில், மனைவியை அவரது தாய்வீட்டில் விட்டுவிட்டு, முகிலன் வெளிநாடு சென்று விட்டார். நான்கு மாதங்களுக்கு முன் திரும்பி வந்த அவர், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனக்கு பெற்றோர் கொடுத்த நகை மற்றும் பொருட்களை திருப்பித் தருமாறு, பிரியதர்ஷினி கணவரிடம் கேட்டுள்ளார். நகையை தர மறுத்த முகிலன், மனைவியை கடுமையாகத் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவரது பெற்றோரும் பிரியதர்ஷினியை கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசாரிடம், பிரியதர்ஷினி புகார் செய்தார். புகாரின் படி, முகிலன் அவரது தந்தை சிதம்பரம், 62, தாய் லைலா, 56, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X