கொள்ளிடம் ஆற்றில் மாவட்ட கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: மேட்டூர் அணை, இந்த ஆண்டு இரண்டாவது முறை நிரம்பியதால், அங்கிருந்து முக்கொம்பு அணைக்கு, ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, காவிரியில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 30 ஆயிரம் கன அடியும், கால்வாய்களில் திறக்கப்பட்ட 4,000 கன அடியும் தவிர, உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, உபரி நீர் திறக்கப்படும் கொள்ளிடம் ஆற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள, 75 ஏரிகளில், 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. 35 ஏரிகள், ஒரு சில நாட்களில் நிரம்பும் தருவாயில் உள்ளன. அனைத்து நீர் நிலைகளிலும், தண்ணீர் தேக்குவதன் மூலம், இரண்டு டி.எம்.சி., அளவுக்கு தண்ணீரை சேமிக்க முடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மூலம் கரையோர கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X