எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெஷின்களில் முதல்நிலை ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெஷின்களில் முதல்நிலை ஆய்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: இந்திய தேர்தல் ஆணையத்தால், திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து, முதல்நிலை ஆய்வு செய்யப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தால், திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 6,340 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,440 கட்டுப்பாட்டு கருவிகள், பெங்களூரு பெல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகம், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள, 20 பொறியாளர்கள், அந்த இயந்திரங்களை முதல்நிலை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். தற்போது, ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, 2,700 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகம், திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆய்வு செய்யப்பட உள்ளன. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ராசாமணி, பார்வையிட்டார். அப்போது, லால்குடி ஆர்.டி.ஓ., பாலாஜி, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., பொன்ராமர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X