இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்த மேஸ்திரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்த மேஸ்திரி கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செய்யாறு: முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவது மனைவிக்கு தெரியாமல், மூன்றாவது திருமணம் செய்த, கட்டட மேஸ்திரியை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த, திருமணியைச் சேர்ந்த குமரேசன், 30, கட்டட மேஸ்திரி. இவர், கடந்த, 2012ல், செய்யாறு பெரும்பள்ளத்தை சேர்ந்த சுதா, 23, என்ற பெண்ணை திருமணம் செய்தார். சுதாவுடன், ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு, 2013ல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து, திருமணியிலேயே வசிக்கும் தன் அத்தை மகள் அனிதா, 22, என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி, கடந்த, 2014ல் இரண்டாவதாக திருமணம் செய்தார். தட்சிணபிரியா, 1, என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்த சரிதா, 20, என்ற இளம்பெண்ணை, மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். யாருக்கும் தெரியாமல், அவரை வேலூரில் குடித்தனம் வைத்தார். இவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் இரண்டாவது மனைவி அனிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து, புகாரின் பேரில், செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X