'குண்டேரிப்பள்ளம் அணைக்கு ஏழு மாதமாக நீர் வரத்தில்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'குண்டேரிப்பள்ளம் அணைக்கு ஏழு மாதமாக நீர் வரத்தில்லை'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி, குண்டேரிப்பள்ளம் அணைக்கு, கடந்த ஏழு மாதங்களாக நீர் வரத்தாகவில்லை.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, கொங்கர்பாளையம் கிராமத்தில், பவானி வடிநிலப்பகுதியில், குண்டேரிப்பள்ளம் ஆற்றின் குறுக்கே, அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், வலதுகரை பாசனமாக, 879 ஏக்கர், இடதுகரையில், 1,619 ஏக்கர் என மொத்தம், 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. டி.என்.,பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, குண்டேரிப்பள்ளம் அணைக்கு, குன்றி, விலாங்கோம்பை, கெம்பனூர், மல்லியம் துருவம் ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரே நீராதாரமாக உள்ளது. மலை முகடுகளுக்கு நடுவே கானகத்தை ஒட்டி, அணை அமைந்துள்ளதால், யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கடந்த, 2017 அக்.,24ல் பெய்த, 90 மி.மீ., மழையால் முழு கொள்ளளவான, 42 அடியை தொட்டு அணை நிரம்பியது. இதனால் கடந்த மார்ச்,15 முதல், சுழற்சி முறையில், 42 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்திய பின், நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லை. இதனால், அணை நேற்றைய நீர்மட்டம், 26.98 அடியாக இருந்தது. போதிய மழையின்றி, அணை வளாகம் தற்போது மண் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நடப்பாண்டு துவங்கியது முதல், நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி, கடந்த ஏழு மாதங்களாக அணைக்கு நீர் வரத்தாகவில்லை. கடந்த ஜூலையில் மட்டும், 28 மி.மீ., மழை பதிவாகி உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X