பயன்பாட்டுக்கு வருமா துணை வேளாண் மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வருமா துணை வேளாண் மையம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பு.புளியம்பட்டி: துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புன்செய்புளியம்பட்டி, வி.ஏ,ஓ.,அலுவலகம் அருகில், துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. கட்டடம் சேதமடைந்ததால், 2015ல், சத்தி சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு சொந்தமான கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில், சில மாதங்கள் மட்டுமே, செயல்பட்ட நிலையில் அலுவலக பணியாளர் பற்றாக்குறையால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுற்றுவட்டார விவசாயிகள் பயன் பெறவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பயிற்சி வழங்கவும், மானியம் கொடுக்கவும் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பவானிசாகர் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில், ''கிடங்கு மேலாளர் பணியிடம், கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது. விதை அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அவ்வப்போது, வேளாண்மை மையம் பூட்டப்பட்டது, உண்மைதான். உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X