ஈரோடு மாவட்டத்தில் 11 பள்ளிகள் தரம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 11 பள்ளிகள் தரம் உயர்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 11 பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாக இந்தாண்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில பள்ளிகளை தரம் உயர்த்தியும், புதிதாக பள்ளிகளை தோற்றுவித்தும் தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளாக செயல்பட்டவை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவை: யூனியன் நடுநிலை பள்ளி தாமரைக்கரை, குன்னன்புரம், கண்டிக்காட்டு வலசு, சுண்டக்காம்பாளையம், ஓடக்காட்டூர், வாய்ப்பாடி, மாக்கம்பாளையம். இதே போல் உயர்நிலை பள்ளிகளாக செயல்பட்ட, நான்கு பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவை: கூடக்கரை, ஏளூர், ராமநாதபுரம் புதூர், தேவர்மலை பள்ளிகளாகும்.பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X