அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அலுவலக வளாகத்தில் மது பாட்டில்கள்: கோபி அருகே, டி.என்.,பாளையம் யூனியன் ஆபீஸ் வளாகத்துக்குள், வேளாண்துறையின் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆபீஸ் கழிப்பிடத்தின் அருகே, ஏராளமான பீர் பாட்டில்கள் கிடக்கின்றன. தினமும் குடிமகன்கள் வந்து, மதுபானங்கள் பருகுகின்றனரா அல்லது அலுவலக பணியாளர்கள் எவரேனும் குடித்துவிட்டு போட்டு செல்கிறனரா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, பீர்பாட்டில்களை அகற்றி, வேளாண் துறையின் புனிதம் காக்க வேண்டும்.
ஆர்.டீ.ஓ., ஆபீசில் கழிப்பிடத்தில் 'கப்பு': கோபி அருகே பொலவக்காலிபாளையத்தில், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலகத்தின் இடது பகுதியில், ஆண்களுக்கான கழிப்பிடம் உள்ளது. முறையாக பராமரிக்காததால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. சிறுநீர் கழிக்கும் இடத்தில், போதிய தண்ணீர் வசதியின்றி உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை இடமாக மாறிய படித்துறை: கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட, ஏமகண்டனூர் ரயில்வே கேட் பகுதியில் இருந்து, காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள புகளூரான் வாய்க்காலில், நான்கு படித்துறைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. படித்துறையை மக்கள் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். தற்போது காவிரியில் நீர் திறப்பால், புகளூரான் வாய்க்காலிலும் தண்ணீர் செல்கிறது. படித்துறைகளில், கால்நடைகளின் இறைச்சி கழிவுகள், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X