வீடு புகுந்து திருடிய கணவன் மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து திருடிய கணவன் மனைவி கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடுமுடி: சிவகிரி, இளங்கோ தெருவை சேர்ந்த பெரியசாமி, 45, பழைய இரும்பு வியாபாராம் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி, 43. இவர்களுக்கு பூபதி, 23, சிவா, 19 என, இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 9ல், பெரியசாமி தன் மனைவியுடன் துணி துவைப்பதற்காக, பொரசமேட்டூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கும், இளைய மகன் சிவா கல்லூரிக்கும், பூபதி ஈரோடு ஆடிட்டர் அலுவலகத்திற்கும் சென்று விட்டனர். இந்நிலையில், பணிகள் முடித்து மதியம், 2:00 மணியளவில் பூபதி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்தும், பீரோ லாக்கரில் இருந்த, 2,000 ரூபாய், நான்கு பவுன் செயின், அரை பவுன் தோடு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது தெரிய வந்ததை அடுத்து, சிவகிரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அம்மன்கோவில் கைகாட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அப்பாச்சி பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்கள் கரூர் மாவட்டம், வெங்கமேடு, சிவானந்தா தெருவை சேர்ந்த தர்மராஜ், 32, அவரது மனைவி ரமணி, 28, என்பதும், இரும்பு வியாபாரி வீட்டில் இருந்து, 4.5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, கொடுமுடி ஜே.எம்.1. நீதிபதி குமார வர்மன் முன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X