ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பலி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பவானி ஆற்றில், நேற்று மதியம் நண்பர்களுடன் குளித்தவர், சேற்றில் சிக்கி இறந்தார். பவானி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் லோகநாதன் மகன் சுதாகர், 21, லேத் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம், 12:30 மணியளவில், அப்பகுதியில் உள்ள நண்பர்கள் நான்கு பேருடன் பவானி-மூலப்பாளையம் பரிசல் துறை பகுதியில் குளிக்க சென்றுள்ளார். நன்கு நீச்சல் தெரிந்த சுதாகர், திடீரென ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் மாட்டிக்கொண்டதால், அவரால் வெளியே வர முடியவில்லை. மீனவர் சந்திரன் மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், பரிசலில் சென்று மூன்று மணி நேரம் தேடி, 3:45 மணிக்கு இறந்த நிலையில், சுதாகர் உடலை மீட்டனர். சுதாகரின் உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவர் மனதையும் கண் கலங்கிட செய்தது. இது குறித்து பொது மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆற்றில், 15 அடி ஆழம் வரை மணல் எடுத்துவிட்டனர். இதனால், குளித்துகொண்டு இருக்கும் போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி சுதாகர் இறந்துள்ளார். இந்த பகுதியில் குளிக்க வரும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் பலர், தொடர்ந்து இறந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X