காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு: சலவையாளர் குடியிருப்புக்கு செல்லும் சாலை துண்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு: சலவையாளர் குடியிருப்புக்கு செல்லும் சாலை துண்டிப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சலவையாளர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு தீவாக மாறியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே, வெண்டிபாளையத்தில் மின் உற்பத்தி தடுப்பணை கட்டும் போது, கருங்கல்பாளையம் காவிரிக்கரை ராகவேந்திரர் கோவில் பகுதியில், ஆற்றுக்குள் ஆக்கிரமிப்பில் இருந்த, சலவை தொழிலாளர்கள் குடியிருப்புகள் அகற்றப்பட்டன. தற்போது அவர்கள், வைராபாளையம் மேல் கரை பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி, முனியப்பன் நகர் என்று பெயர் சூட்டி அங்கு குடியிருந்து வருகின்றனர். 250 வீடுகள் உள்ளப்பகுதிக்கு, ஆற்றின் கரையான மண்சாலை வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி வேறு சாலை வசதி கிடையாது. இந் நிலையில், நேற்று மேட்டூர் அணையிலிருந்து, ஒரு லட்சம் கனஅடிக்கும்மேல் உபரி நீர் திறக்கப்பட்டது. இதில், முனியப்பன் நகர் செல்லும், மண்சாலையும், 100 மீட்டர் தூரத்துக்கு முற்றிலும் நீரில் மூழ்கி விட்டது.

* கொடுமுடி தாலுகாவுக்குட்பட்ட கொளாநல்லி, இழுப்புத்தோப்பு, காசிபாளையம் உள்ளிட்ட கரை யோரப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், வேறு இடங்களில் இடமாற்றம் செய்து கொள்ளும்படி கூறி, பொதுமக்களை வருவாய்த்துறையினர் வெளியேற்றினர். காவிரி கரையோரம் நடவு செய்யப்பட்டிருந்த மஞ்சள், கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்டவை நீரில் மூழ்கியது.


* கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கீழ், பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இடம் உள்ளது. இப்பகுதிக்கு ஆர்வமிகுதியால் வரும் பொதுமக்கள், ஆற்றின் நடுவே குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்று சேர நின்று, செல்பி எடுத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


* மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் காங்கேய பூபதி கூறியதாவது: பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வாகனங்கள், ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த நிலையத்துக்கு உட்பட்ட தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி சென்னிமலை, பெருந்துறை, அந்தியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். பவானி, ஈரோட்டில் தலா ஒரு ரப்பர் படகு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X