சி.என்.கல்லூரியை அரசு ஏற்று நடத்த கோரி தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.என்.கல்லூரியை அரசு ஏற்று நடத்த கோரி தீர்மானம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு, பவானி பகுதி குழு நிர்வாகி வினிஷா தலைமையில் நடந்தது. பிரியதர்ஷினி வரவேற்றார். பிரவீன், அஞ்சலி தீர்மானம் வாசித்தனர். இந்திய மாணவர் சங்க மத்திய குழு உறுப்பினர் கண்ணன் பேசியதாவது: மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை, தற்போது படிப்படியாக நிறுத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு சி.என்.கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். சத்தி அரசு கலை கல்லூரி மணவர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, கட்டட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் பெறும் முறையை ஒழிக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் கண்ணன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட செயலாளராக பிரவீன், மாவட்ட தலைவராக ஓம் பிரகாஷ் உட்பட, 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X