மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், கணபதிபாளையம் அடுத்த சோளங்காபாளையத்தில், மொடக்குறிச்சி தாசில்தார் அசரபுனிசா நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் மாவட்டத்திலிருந்து, ஈரோட்டிற்கு மணல் ஏற்றிக்கொண்டு, ஒரு டிப்பர் லாரி வந்தது. லாரியை நிறுத்தி, சோதனையில் தாசில்தார் ஈடுபட்டார். அதில், பரமத்தி வேலூரிலிருந்து உரிமம் இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் அசரபுனிசா, தாலுகா அலுவலகத்திற்கு டிப்பர் லாரியை எடுத்து வந்தார். அதிகாரிகளுக்கு பயந்த, லாரி டிரைவர் தலைமறைவானார். பின்னர் அபராத நடவடிக்கைக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., நர்மதாதேவிக்கு, மொடக்குறிச்சி தாசில்தார் அறிக்கை அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X