அமைச்சர் உதவியாளர் என்று கூறிய ஆளும் கட்சி பிரமுகர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் உதவியாளர் என்று கூறிய ஆளும் கட்சி பிரமுகர் கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் மாது. இவர், எம்.ஜி.ஆர்., மன்றத்தில் பதவி வகித்துள்ளார். கடந்த மாதம் ஈரோடு சி.இ.ஓ., பாலமுரளி மற்றும் அவரது அலுவலகத்துக்கு போன் செய்து, 'நான் அமைச்சர் செங்கோட்டையன் பி.ஏ., பேசுறேன்' எனக்கூறி, சில காரியங்களை செய்ய கூறியுள்ளார். சில பள்ளிகளில் சீட்டு, ஆசிரியர் இடமாறுதல் என பல முயற்சி செய்துள்ளார். சந்தேகமடைந்த சி.இ.ஓ., தரப்பினர், அமைச்சரிடமும், அமைச்சரின் பி.ஏ.,க்களிடமும் இதுபற்றி கேட்டபோது, இவர் போலி என தெரியவந்தது. இது குறித்து, செங்கோட்டையன் தரப்பிடம் கூறியதும், கண்டித்து விட்டுவிடும்படி கூறினர். ஆனால், ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., ராமலிங்கத்துக்கும், மாதுவுக்கும் ஆகாததால், அவர் மீது புகார் செய்து, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்ய வைத்து, கைதும் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X