புத்தக திருவிழா: 70 லட்சத்துக்கு நூல்கள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக திருவிழா: 70 லட்சத்துக்கு நூல்கள் விற்பனை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த புத்தக திருவிழாவை மாணவர்கள் உள்பட பொதுமக்கள், ஒரு லட்சம் பேர் பார்வையிட்டதில், 70 லட்சம் ரூபாய்க்கு, புத்தகங்கள் விற்பனையாகின. தர்மபுரி புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் புத்தகத் திருவிழா, மதுரா பாய் திருமண மண்டபத்தில், கடந்த, 3ல் துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. தினமும், காலை, 11 முதல், இரவு, ஒன்பது மணி வரை நடந்த திருவிழாவில், மாலையில் கருத்தரங்கம் நடந்தது. இதில், பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் உரையாற்றினர். இதில், 47 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 60 பள்ளிகள், 20 கல்லூரிகளை சேர்ந்த, 40 ஆயிரம் மாணவ, மாணவியர், பொதுமக்கள் என, ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர். அதன் மூலம், 70 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையானதாக, விழா பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X