120 அடியிலேயே நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : தொடரும் வெள்ள அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

120 அடியிலேயே நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : தொடரும் வெள்ள அபாயம்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (9)
Advertisement
மேட்டூர், வெள்ள அபாயம், காவிரி

சேலம் : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 66,425 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 26,425 கனஅடியும், கபினி அணையில் இருந்து 40,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 1.27 லட்சம் கனஅடியில் இருந்து 1.10 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் ஒரு லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 36வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1.14 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1.13 லட்சம் கனஅடியில் இருந்து 1.11 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடியாகவே இருந்து வருகிறது. நீர்இருப்பு 93.95 டிஎம்சியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 800 கனஅடியாக உள்ளது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து 79,300 கனஅடியும், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து 40,107 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் சேலம், கடலூர், திருவாரூர், தஞ்சை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
13-ஆக-201815:34:39 IST Report Abuse
mindum vasantham வீராணம் பக்கத்திலே இன்னொரு பெரிய ஏறி உள்ளது அதை நிரப்பலாம் கொள்ளிடத்தில் பிரியும் ஒரு கிளை ஆறு வெள்ளாற்றில் சேருகிறது அங்கேயும் கொஞ்சம் திருப்பலாம் வீரநாராயணன் எரியும் நிரப்பலாம் , வீரனத்தில் இருந்து மதுராந்தகம் ஏறி மற்றும் சென்னையின் பல ஏரிகளையும் நிரப்பலாம்
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201812:52:32 IST Report Abuse
SridharSambandham காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இதனைப் படிக்கும் போது எனக்கு காவிரியிலிருந்து பெரிய ஆறுகள் வாய்க்கால்கள் குளம் குட்டைகள் பாசன வாய்க்கால்கள் இதை அனைத்தையும் மனை மனையாக மாறிவிட்டது மீதி இருக்கும் இடத்தில் பாதிக்கு மேல் ஆக்கிரமிப்பில் உள்ளது பிறகு எப்படி தண்ணீரானது குளம் குட்டைகளில் போய் சேரும் இனிவரும் காலங்களில் அனைத்து நீரானது நேரடியாக கடலில் தான் போய் சேரும் வைத்தவரே குளம் குட்டைகளுக்கு பாசனத்திற்கு போய் சேர்வது மிகவும் அரிது பதவியில் உள்ள அரசாங்கத்தினதும் சரி விவசாய பெருமக்களின் சரி இருவர் மீதும் அதிக குற்றங்கள் உள்ளது இதனை சரிசெய்ய வேண்டியது மக்களின் கடமை வாழ்க வளமுடன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X