மந்த கதியில் பாலப்பணிகள்: மினிலாரி கவிழ்ந்து விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மந்த கதியில் பாலப்பணிகள்: மினிலாரி கவிழ்ந்து விபத்து

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பர்கூரில் இருந்து, போச்சம்பள்ளி செல்லும் சாலையில் மஜீத்கொல்லஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருங்கல்குட்டை என்ற இடத்தில், புதிய தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த, ஒரு ஆண்டாக பணிகள் மெத்தனப்போக்கில் நடந்து வருவதால், அப்பகுயில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். இந்த பாலம் அமைக்கும் இடத்தையொட்டி, வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றன. நேற்று காலை, 7 மணிக்கு, கல்பாரம் ஏற்றிய மினி லாரி பாலம் கட்டும் இடத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலப் பணிகள் மந்த கதியில் நடப்பதாலும், சாலைகள் சீராக இல்லாததாலும், விபத்து ஏற்பட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X