கி.கிரியில் மனைப்பிரிவுகள் வரைபடுத்தும் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கி.கிரியில் மனைப்பிரிவுகள் வரைபடுத்தும் முகாம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு சிறப்பு முகாம்களில் ஒப்புதல் பெற்று கொள்ளலாம்' என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் குறித்து, பொது இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகாம்களில், நகர் ஊரமைப்புத்துறை, பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை, வங்கி சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சிறப்பு முகாம்களில், மனை உரிமையாளர்களிடம் இருந்து நேரடியாகவே விண்ணப்பங்களை பெற்று, அன்றைய தினமே மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில், வீடுகட்டி குடியிருப்பவர்கள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளாத பட்சத்தில், தங்கள் மனைப்பிரிவுக்கு சுகாதார வசதிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதர வழி இல்லை. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த நகர்ப்புற வளர்ச்சித்துறை, வரும் நவ., 3 வரை மட்டுமே, காலஅவகாசம் கொடுத்துள்ளதால், அதற்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X