மண் கொள்ளை ஜோர்: மாமூலால் அதிகாரிகள் கொர்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண் கொள்ளை ஜோர்: மாமூலால் அதிகாரிகள் கொர்...

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில், சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்படுவதை, கவனிப்பால், வருவாய் துறையினர், போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், அதிக அளவில் செங்கல் சூளை உள்ளது. இங்கு, செங்கல் உற்பத்தி செய்ய புறம்போக்கு நிலம், ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து, அதிக அளவில் மண் திருடப்படுகிறது. குறிப்பாக, போச்சம்பள்ளியில் இருந்து, தர்மபுரி செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள நிலத்தில் இருந்து இரவு நேரத்தில் பொக்லைன் வைத்து, மண் எடுத்து கடத்தப்படுகிறது. இதுகுறித்து, புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இவ்வாறு மண் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர், ஆளும் கட்சிக்காரர் எனக்கூறி மிரட்டுவதாலும், பல நேரங்களில் மாமூலாலும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இரவு நேரத்தில் நடக்கும், மண் திருட்டை தடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X