புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆழ்துளை குழாய் சேதம்: கரூர் செங்குந்தபுரத்தில், அப்பகுதி மக்கள் வசதிக்காக ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. அதில் மக்கள் தண்ணீர் பிடித்து வந்த நிலையில், நாளடைவில் குழாய் பழுதாகிவிட்டது. நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்யவில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் பயன்பாடற்று காணப்படுகிறது. அப்பகுதி மக்கள், போதிய குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

- பி.கிருஷ்ணசாமி, செங்குந்தபுரம்.

நிழற்கூடம் முன் நிற்காத பஸ்கள்: கரூர் - கோவை சாலையில் உள்ள சின்ன ஆண்டாங்கோவில் பஸ் நிறுத்தம் அருகே, பொதுமக்கள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பஸ்களை அதன் அருகே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயன்படுத்தப்படாமல், நிழற்கூடம் சேதம் அடையும் நிலையில் உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டி உள்ளது. நிழற்கூடம் முன், பஸ்களை நிறுத்த வேண்டும்.

- ஆர்.சக்திவேல், சின்ன ஆண்டாங்கோவில்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X