விவசாயிகள் பயிர் காப்பீடு பெற வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பயிர் காப்பீடு பெற வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: தோகைமலை வட்டார விவசாயிகள், பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என, வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தோகைமலை சுற்றுவட்டார கிராமங்களான நெய்தலூர், கள்ளை, சேப்ளாப்பட்டி, முதலைபட்டி ஆகிய வருவாய் மற்றும் குறுவட்ட அளவில், அறிவிக்கப்பட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும், (குத்தகை விவசாயிகள் உட்பட) இந்த திட்டத்தில் சேரலாம். பயிர் கடன் பெற்ற விவசாயிகள் அனைவரும், திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். காரீப் பருவப் பயிர்களான உளுந்து மற்றும் துவரை பயிர்களுக்கு ஏக்கருக்கு, 286 ரூபாய் பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணம், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண்ணுடன் தோகைமலை வட்டாரத்தில் உள்ள நெய்லூர், தெற்குபட்டி, கள்ளை, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம். திட்டத்தில் சேர, வரும் 16 கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு, தோகைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X