டி.என்.பி.எல்., சார்பில் கிரேன் ஆப்பரேட்டர் இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எல்., சார்பில் கிரேன் ஆப்பரேட்டர் இலவச பயிற்சி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் நடக்கவுள்ள, குறுகிய கால ஜே.சி.பி., அல்லது கிரேன் ஆப்பரேட்டர் இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விண்ணப்பதாரர் புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, டி.என்.பி.எல்., டவுன் பஞ்சாயத்துகள், ந.புகளூர், புன்னம், கோம்புபாளையம், திருகாடுதுறை மற்றும் வேட்டமங்கலம் கிராம பஞ்சாயத்துகளுக்குட்பட்ட பகுதிகளில், நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பயிற்சி சேரலாம். ஆக., 1, 2018ல், 18 வயது நிரம்பியவராக, 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இலகுரக ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். முதலில் வரும், 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஞாயிறு தவிர மற்ற வேலை நாட்களில், முதன்மை பொதுமேலாளரை (மனிதவளம்) அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 04234-277001-10 வரை உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 17 மாலை, 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X